செரியலூர் இனாம் கிராமத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கல்
செரியலூர் இனாம் கிராமத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு ஏகா பவுண்டேசன் மூலமாக வழங்கப்பட்டது.;
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், செரியலூர் இனாம் கிராமத்தில் வசிக்கக்கூடிய கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு பொருள்கள் ஏகா பவுண்டேசன் மூலமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஜியாவுதீன் தலைமை வகித்தார். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் ஏன் தேவை என ஏகா பவுண்டேஷனை சேரந்தவர்கள் விளக்கமளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு செய்து வரும் அரும் பணிகளையும் பாராட்டி ஊராட்சி மன்ற தலைவர் விழிப்புணர்வு உரை ஆற்றினார்.
நிகழ்சியில் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கா் புதுக்கோட்டை ஏகா பவுண்டேசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கைலாச மூர்த்திஊராட்சி மன்ற உறுப்பினர்கள்அருள்செல்வன் சைய்து அபுதாகிர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் கிராம பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி முடிவில் ஊராட்சி செயலாளர் இன்ப ஜோதி நன்றி கூறினார்.