அணவயல் கிராமம் அருகே கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடித்து அழிப்பு
தகர பேரல் , சிறிய பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றிலும் இருந்த சுமார் 300 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கபட்டு அழிக்கப்பட்டது;
ஆலங்குடி அடுத்த அன்னவயல் கிராமம் அருகே போடப்பட்டிருந்த சாராய ஊழலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த அணவயல் கிராமம் அருகே போடப்பட்டிருந்த சாராய ஊழலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். இதில் தலைமறைவாகிவிட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அணவயல் கிராமத்தில் வெட்டுக்குளம் அருகே சுந்தரம் மகன் சிவராசு என்பவரின் தோட்டத்தில் சாராய ஊறல் போட்டிருப்பதாக, வடகாடு தனிப்பிரிவு தலைமை காவலர் முருகேசனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனி பிரிவு காவலர் முருகேசன் வடகாடு உதவி ஆய்வாளர் மருதமுத்து, தலைமை காவலர் புருஷோத்தமன் மற்றும் காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்து போது அங்கு தகர பேரல் ஒன்றிலும், சிறிய பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றிலும் இருந்த சுமார் 300 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கபட்டு, சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டது. போலீசார் வருவதை அறிந்த சிவராசு அங்கிருந்து தலைமறைவார். இது குறித்து வடகாடு போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான சிவராசை தேடி வருகின்றனர்.