காவல் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்...

விதிமுறைகள்குறித்த விழிப்புணர்வு;

Update: 2021-05-09 11:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் நிலையத்தில் கரோனா வைரஸ் தொற்று குறித்து நடைபெற்ற வர்த்தக சங்கத்தினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு, ஆலங்குடி டி.எஸ்.பி., முத்துராஜா,இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து, டிஎஸ்பி., முத்துராஜா பேசுகையில் வணிக வளாகங்களில்இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு ஏற்கனவே தடை தனியாக செயல்படுகின்ற பலசரக்கு கடைகள், காய்கறிகள்,இறைச்சி கடைகளுக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

மேலும், ஹோட்டல், மளிகை கடைகளில் பணிபுரியும்நபர்களுக்கு ஐ.டி கார்டு வழங்க வேண்டும். இதனை, வர்த்தக சங்கம் மற்றும்ஹோட்டல் உரிமையாளர் சங்கம் கடைபிடிக்க வேண்டும். என அவர் தெரிவித்தார். இதில், வர்த்தக சங்க தலைவர் மணமோகன், ஹோட்டல் சங்க தலைவர்ரெங்கநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News