துணை தேர்தல் நடத்தும் அலுவலர் உட்பட 4 பேருக்கு கொரோனா தோற்று பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியின் துணை தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆலங்குடி வட்டாட்சியர் பொன்மலர் உட்பட வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நான்கு பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.;

Update: 2021-05-01 16:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு துணை தேர்தல் நடத்தும் அலுவலராக செல்ல இருந்த நிலையில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு பதிலாக மாற்று அலுவலர்கள் பணியில் இருப்பார்கள் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.2 வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் என நான்கு பேருக்கு கொரோனா உறுதியானதால் கடந்த சில நாட்களாக பல்வேறு பணிகளுக்காக வட்டாட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

Similar News