துணை சுகாதார நிலைய கட்டிடப்பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் பூமி பூஜை
ரூ.20 லட்சம் மதிப்பில் துணை சுகாதாரநிலைய புதிய கட்டிடத்திற்கான பணிகளை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கோவிலூர்ஊராட்சியில், ரூ.20 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் புதிய கட்டிடத்திற்கானபூமிபூஜை செய்து, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும்இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலன்காக்கும்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளால் கிராமங்தோறும் வளர்ச்சி பெற்று வருகின்றன. கோவிலூர் ஊராட்சியில் புதிய துணை சுகாதார நிலையம் ரூ.20 லட்சம் மதிப்பில்கட்டும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளைதரமானதாகவும்,குறித்த காலத்திற்குள் நல்லமுறையில் கட்டி முடிக்குமாறு சம்மந்தப்பட்டஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் நலனுக்காக தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்
இதில், ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி,ஊராட்சிமன்றத் தலைவர் பவுலினாஜோ, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர்பன்னீர்செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்தர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.