2,500 ஆண்டுகள் பழமையான கோட்டை சுவரின் மீது நடந்து சென்ற கல்லூரி மாணவ மாணவிகள்

பொற்பனைக்கோட்டையில் தொல்லியலாளர் கள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பாரம்பரிய நடைபயணத்தை கோட்டை சுவர் மீது மேற்கொண்டனர்.

Update: 2021-08-28 13:32 GMT

 பொற்பனைக்கோட்டை கோட்டைச் சுவரில் நடைபயணம் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் தமிழார்வலர்கள், தொல்லியலாளர்கள், மாணவர்கள் சமூக ஆர்வலர்கள், கோட்டை சுவரின் மீது பாரம்பரிய நடைபயணத்தை  மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது, வரலாற்று ஆய்வாளர்கள் ராஜேந்திரன், ராஜாமுகமது, மணிகண்டன், இராஜகுரு ஆகியோர் கோட்டையைப் பற்றிய வரலாற்று தகவல்களை பகிர்ந்து கொண்டனர். கோட்டைச் சுவரில் இருந்த கருவேல மரங்களை அகற்றிய வேப்பங்குடி ஊராட்சி மன்ற தலைவர் இராஜாங்கம் நடை பயணத்தை தொடங்கிவைத்தார்.

பயணத்தின்போது கோட்டை மதில் சுவரின் உயரம் மற்றும் சுற்றளவு கணக்கிடுவதற்கான அளவீட்டு பணியினை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் மணிகண்டன், தலைவர் ராசேந்திரன் உறுப்பினர்கள் ராஜாங்கம், பீர்முகம்மது, கஸ்தூரிரங்கன் ,மஸ்தான் பகுருதீன் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் துரை.மணிசேகரன், ஆசிரியை கமலம், டெய்சி ராணி, மாணவர் வீரமணி ஆகியோர் மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வீதி கலை இலக்கிய களத்தின் பண்பாட்டை உணர்த்தும் கவிதை வாசிப்பு நிகழ்விற்கு கவிஞர் முத்து நிலவன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியினை ஆசிரியை கீதா ஒருங்கிணைத்தார்.



 நிகழ்வில் திரைப்பட பாடலாசிரியர் தனிக்கொடி, தமிழாசிரியர் திருப்பதி, கவிஞர் திருப்பதி, சங்கத்தமிழ் அகாடமியின் நிர்வாகி உதயக்குமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.நிகழ்வில் பொற்பனைக்கோட்டையின் பண்பாட்டு அடையாளங்கள் குறித்து இராஜாமுகமது , இராசேந்திரன் ஆகியோர் பேசினர் .இறுதியாக தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் பொற்பனைக்கோட்டையை பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக அறிவிப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசும் , ஒன்றிய அரசின் தொல்லியல் துறை மூலமும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தென்னிந்திய அளவில் இருக்கும் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக பொற்பனைக்கோட்டையை பாதுகாப்பது தமிழர்களின் கடமை என்பது குறித்து சிறப்புரையாற்றினார். 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கோட்டைச் சுவரில் இருந்த முள் புதர்களை அகற்றி மாணவிகள் கோட்டைச் சுவரில் நடை பயணம் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதனை ஆர்வத்துடன் பார்த்த ரசித்த கல்லூரி மாணவிகள் அனைவரும் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags:    

Similar News