நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை

தமிழகத்தில் முதல் முறையாக நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை அமைக்கப்பட்டது.;

Update: 2022-04-16 10:19 GMT

தமிழகத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை அமைக்கப்பட்டது.

தமிழகத்திலேயே அதிகப்படியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி தற்போது வரை 50க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட நெம்மக்கோட்டை சித்தி விநாயகர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு எழுபத்தி இரண்டாம் ஆண்டு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் குடும்பத்தார்கள் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை தஞ்சாவூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் மாற்றம் 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

மூன்று பிரிவாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கம் வீரர்களுக்கும் வீரர்கள் பிடியிலிருந்து சிக்காமல் செல்லும் காளைகளுக்கும் அண்டா, குண்டா, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, தங்க நாணயம், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வெயிலின் தாக்கத்தினால்  சோர்வடையாமல் இருப்பதற்கு வாடிவாசல் மேலே துணியால் பந்தல் அமைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News