பொதுமக்களுக்கு உணவு பரிமாறி வாக்கு கேட்ட வேட்பாளர்

Update: 2021-03-26 11:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் வைரவன் ஹோட்டலில் உணவு பரிமாறி வாக்கு சேகரித்தார்.

எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே மக்களை கவரும் வகையில் பல்வேறு சுவையான சம்பவங்களை செய்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் வைரவன் ஆலங்குடியில் கடை கடையாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு ஹோட்டலில் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு உணவு பரிமாறி தனக்கு வாக்கு சேகரித்தார். இதனால் அங்கு கலகலப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News