அதிமுக அறிவித்த சலுகைகள் உங்களை வந்தடைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ம . தங்கவேல் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக தர்ம.தங்கவேல் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் ஊர் ஊராக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கல்லாலங்குடி, நடேச நகர், செரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் தர்ம .தங்கவேல் வாக்கு சேகரித்தார் . அப்போது அவர் பேசுகையில், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் ,சீர்வரிசைக்கு பணம் ,அரசு பணியில் உள்ளவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கி பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இருந்து வருவது அதிமுக அரசு தான் .
அதேபோல் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் பெண்களின் சுமையை குறைக்கும் வகையில் வாஷிங் மெஷின், மாதம் 1500 ரூபாய் பணம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதிமுக அறிவித்த சலுகைகள் உங்களை வந்தடைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார் . வாக்கு சேகரிப்பின் போது திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஆலங்குடி நகரச் செயலாளர் பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.