தலைமை நிர்வாகிகள் போட்டியின்றிதேர்வு: புதுக்கோட்டையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

அதிமுக நிர்வாகிகளாக ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்;

Update: 2021-12-06 13:15 GMT

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியின்றி தேர்வான அதை கொண்டாடும் விதத்தில் புதுக்கோட்டை மேட்டுப்பட்டி அருகே பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக நிர்வாகிகள்

புதுக்கோட்டையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர்.

அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவரும் கழக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக எதிர்க்கட்சித் தலைவரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதனை கொண்டாடும் விதத்தில்,  தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை திருமலைராய சமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டுப்பட்டி கடைத்தெருவில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News