புதுக்கோட்டையில் ஒரு குற்றாலம்- பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்
புதுக்கோட்டையில் ஒரு குற்றாலம்- போல் கொட்டும் அருவியை பார்த்து பொதுமக்கள் ரசித்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் உள்ள அம்புலி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது .
இந்த தண்ணீர் பள்ளத்து விடுதி அருகே உள்ள கல்லோடை என்ற பகுதியில் ஒரு பள்ளத்தாக்கில் அருவிபோல் கொட்டுகிறது. இது பார்ப்பதற்கு குற்றாலம் ஒகேனக்கல் அருவி போல் காணப்படுகிறது.
புகழ்பெற்ற ஒகேனக்கல் குற்றால அருவியில் கொட்டுவது போல் தண்ணீர் பிரிந்து பல்வேறு இடங்களில் கொட்டி வரும் அழகை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.