புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 17 பேர் படுகாயம்

Update: 2021-07-23 11:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து 17 பேர் படுகாயமடைந்தனர்  

 ஆலங்குடி அருகே உள்ள எஸ்.கலபம் ஆண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், குப்பகுடி அருகே உள்ள தேங்காய் நார் தொழிற்சாலைக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். 

இந்நிலையில்,  ஆண்டிப்பட்டியிலிருந்து இவர்களை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ, குப்பகுடி அருகே உள்ள மேலக்கோட்டை அருகில் எதிர்பாராதவிதமாக  கவிழ்ந்தது.

இந்த விபத்தில், லோடு ஆட்டோவில் பயணம் செய்த புஷ்பம்( 35) லட்சுமி (30) மல்லிகா (40), மெய்யம்மாள் (40), பிச்சம்மாள் (45), வீரம்மாள் (45), முத்தழகு( 50), பாக்கியலட்சுமி (48), கலா (30), சாந்தகுமாரி(32)  உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களில் 4 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar News