புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பறக்கும்படை வாகனசோதனையின் போது 1.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வல்லத்திராகோட்டையில் பறக்கும் படையினர் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த போது நாயக்கர்பட்டியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்ட போது உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், ஆலங்குடி தேர்தல் அலுவலர் அக்பர் அலியிடம் ஒப்படைத்தனர்.