பனை மரங்களை பாதுகாக்க கோரி சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் மனு

பனை மரங்களை பாதுகாக்க சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் மனு;

Update: 2021-07-04 17:48 GMT

பனை மரங்களை பாதுகாக்க கோரி சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது

புதுக்கோட்டையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனை புன்னகை அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் ஜெகன் நிறுவனத் தலைவர் கலை பிரபு அறங்காவலர் அப்பாசாமி மற்றும் நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு மரமான பனை மரங்களை பாதுகாக்க அரசு முன் வரவேண்டும், நிலத்தடி நீர்நிலைகளை பாதுகாக்க மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது.

மற்றும் பாரம்பரிய மரங்களை வெட்டுவதற்கு முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும் தமிழ்நாடு அரசு பனை மரங்களை அதிக அளவில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை அதிக அளவில் பல சமூக நல அமைப்புகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Similar News