புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சாலைகளில் மோட்டார் பைக்குகளில் செல்பவர்கள், பேருந்துகளில் பயணம் செய்பவர்கள், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் என பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் ஜெகதீசன், ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், விழி அறக்கட்டளை மேலாண் இயக்குனர் மணிகண்டன், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.