கேக் வெட்டி மகளிர் தின விழா கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் மகளிர் தின விழாவை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.;
இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் வருவாய் துறையினர், ஆலங்குடி காவல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக ஆலங்குடி வட்டாட்சியர் பொன் மலருக்கு ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜா பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்பு பெண் காவலர்கள் ஆலங்குடி வட்டாட்சியர் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டிவிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.