பாஜக மாநிலத் துணைத் தலைவர் கார் மோதியதில் விபத்து
ஆலங்குடியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பும் போது பாஜக மாநிலத் துணைத் தலைவர் கார் மோதியதில் ஒருவர் படுகாயம்.;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற பாஜக பிரமுகர் திருமண விழாவில் கலந்து கொள்ள பிஜேபியின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் வருகை தந்தார் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு முத்துப்பேட்டையில் மற்றொரு திருமண நிகழ்ச்சிக்காக விரைந்தபோது வடகாடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்தின் கார் எதிரே வந்த தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முதுகாடு பகுதியைச் சேர்ந்த திலகர் என்பவர் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் திலகர் கை முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அப்பகுதியினர் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்தின் காரில் ஏற்றி சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வடகாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.