சென்னை பாஜக பிரமுகர் படுகொலை: திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்

சென்னையில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2023-05-04 03:00 GMT

சென்னையில், பாஜக பிரமுகர் படுகொலையைக் கண்டித்து, திருச்செங்கோட்டில் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில பொருளாளரும் பஞ்சாயத்து தலைவருமான சங்கர், சென்னை அருகே மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்தும், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில், திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பாஜக பட்டியல் அணித்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ் குமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஈஸ்வரன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தர். மாவட்டச் செயலாளர் பூங்குழலி, நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன், பட்டியல் அணி பொதுச் செயலாளர்கள் சாந்தாமணி, செந்தில்குமார், பிரகாஷ், துணைத் தலைவர்கள் செங்கோட்டையன், வெங்கடேசன், மாவட்டச் செயலாளர்கள் சரவணன், ராமசாமி, பழனிசாமி, விவசாய அணி மாவட்டத் தலைவர் நடராஜ், விவசாய அணி மாநில பொறுப்பாளர் சத்யராஜ், விவசாய அணி மாவட்ட துணை தலைவர் ராஜவேல், பொருளாதாரப் பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் பூச்சப்பன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் தங்கவேல், தமிழ் மற்றும் இலக்கியப் பிரிவு மாவட்டத் தலைவர் கணேசன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டதலைவர் சுரேஷ், இளைஞர் அணி மாவட்ட தலைவர் செந்தில், திருச்செங்கோடு நகர பொதுச்செயலாளர் சதீஷ் ரோஷன், திருச்செங்கோடு தெற்கு ஒன்றியதலைவர் சசிதேவி, பொதுச்செயலாளர் விஜயன், திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய தலைவர் சந்திரன், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய தலைவர் சங்கர், குமாரபாளையம் நகர தலைவர் சுகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐயப்பன்,முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் ரஜினி, நட்சத்திர பேச்சாளர் தங்கவேல், பட்டியல் அணி ஒன்றிய தலைவர்கள் பெரியசாமி, மாரிமுத்து, பொதுச் செயலாளர்கள் மீசை முனியப்பன், மாரியப்பன், சக்கரபாணி, மாதேஸ்வரன், பழனிசாமி உள்ளிட்ட திரளானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திமுக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

Similar News