இராசிபுரம் அருகே ஐ.டி நிறுவன ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை

ராசிபுரம் அருகே குடும்ப பிரச்சினையால், ஐ.டி நிறுவன ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2021-09-28 02:45 GMT

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகில் உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (41);  பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், கவின், யுகன் என்ற மகன்களும் உள்ளனர். கெரோனா லாக்டவுன் காரணமாக, ஐடி கம்பெனிக்கு செல்லாமல், ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் சொந்த ஊரிலேயே தங்கியிருந்தார்.

பின்னர், கோவையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். குறைந்த சம்பளம் என்பதால் விருப்பமின்றி வேலைபார்த்து வந்தார். தனியாக சாப்ட்வேர் கம்பெனி தொடங்க, ஊரில் உள்ள விவசாய நிலத்தை விற்று பணம் தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி லாவண்யா கோவையில் உள்ள தனது தந்øதை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் சதீஷம் மிகவும் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

சதீஷ், மது மது அருந்திவிட்டு, அடிக்கடி விவசாய நிலத்தை விற்று பணம் தருமாறு தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று திடீரென சதீஷ் தன்னுடைய வயிறு, கை, கால்களை கத்தியால் அறுத்துக் கொண்டு தூக்குப் போட முயற்சி செய்துள்ளார். இதைக் கண்ட சதீஷின் பெற்றோர், அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ல முயற்சி செய்தனர். ஆம்புலன்ஸைக் கண்ட சதீஷ், தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.

தகவலின் பேரில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், அவரை மீட்க முயற்சி செய்தனர். கிணற்றில் கொடிய விஷப்பாம்புகள் இருந்ததால், முதலில் அவற்றைப் பிடித்த பிறகு, சதீஷை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் மூச்சுமுட்டி சதீஷ் இறந்துவிட்டார். 2 மணிநேரத்திற்குப் பிறகு சதீஷின் உடலை தீயைணப்பு படையினர் மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News