ராசிபுரத்தில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் சீல்

ராசிபுரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கடை உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-29 04:00 GMT

பைல் படம்

தமிழகம் முழுவதும் 28ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மளிகை, காய்கறி, இறைச்சி, பாத்திரம், ஸ்டேசனரி, ஹோட்டல், பேக்கரி, டீக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் ராசிபுரத்தில் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வியாபாரம் நடைபெறுவதாக நாமக்கல் சப் கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

இதையொட்டி,சப் கலெக்டர் கோட்டைக்குமார் தலைமையில் அலுவலர்கள் ராசிபுரம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பூக்கடை வீதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஜவுளிக்கடைக்கு சென்றனர். அங்கு கடைக்குள் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு, வியாபாரம் நடந்து வந்தது.

இதனையடுத்து அந்தக் கடையை பூட்டி சீல் வைக்க சப் கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கடை உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News