நாமகிரிப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு
நாமகிரிப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
நாமகிரிப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய, ராசிபுரம் கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களுக்கு சீõரான முறையில் மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு மாதமும், துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையொட்டி, ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில், நாளை 20ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இதனால், நாமகிரிப்பேட்டை, குரங்காத்துப்பாளையம், கோரையாறு, மூலப் பள்ளிப்பட்டி, தண்ணீர்பந்தல்காடு, அரியாக்கவுண்டம்பட்டி, பழனியப்பனூர், பச்சுடையாம்பாளையம், தொ.ஜேடர்பாளையம், வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் ஆகிய பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.