பள்ளிபாளையத்தில் மழை நீர் செல்ல வடிகால் வசதி

பள்ளிபாளையம் காவேரி ஆற்று பாலத்தின் கீழ் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2021-04-19 12:11 GMT

காவேரி பாலம் (மாதிரி படம்)

பள்ளிபாளையம் கீழ்காலனி ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில்  மழை நீர் வடிந்து  செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று  வருகிறது.

பள்ளிபாளையம் அருகே உள்ள  கீழ்காலனி பகுதியில்  ரயில்வே பாலம் உள்ளது. அந்த பாலத்தின்  கீழே இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு  பாதை  உள்ளது. அந்த  வழித்தடத்தின் அருகே ஒரு சிறிய ஓடை செல்கிறது. மழை பெய்யும் காலங்களில் சாலையின் மேற்பரப்பில் மழை நீர் தேங்கிச்செல்லும். அதனால் மழை பெய்யும் காலங்களில் அந்த வழியே  வாகனங்கள் செல்ல முடியாது. மழை தண்ணீர் பாய்ந்து  சாலையும் சேதமடைந்து சகதிக்காடாக மாறிவிடும். அந்த நிலையை மாற்றுவதற்காக தற்போது மழைநீர் சீராக செல்வதற்கு  வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News