குமாரபாளையத்தில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது
குமாரபாளையத்தில், மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்பனை செய்து வருவதாக, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை கண்காணித்து உடனே பிடிக்க எஸ்.பி. உத்திரவிட்டதின் பேரில், குமாரபாளையம் போலீசார் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன்பேரில், காலை 11:00 மணியளவில் பை ஒன்றில் வந்தவரிடம், சந்தேகத்தின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். தொடர்ந்து, போலீசார் அவரத்பையை பார்த்த போது அதில் 10மது பாட்டில்கள் இருந்தன.
போலீசார் விசாரணையில் அவர் பெயர் சின்னுசாமி, 39 என்பதும், அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், அதிக விலைக்கு மது விற்பதற்காக பாட்டில்கள் வாங்கி வந்ததும் தெரிய வந்தது. போலீசார், அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.