'மரமே விவேக் உயிருக்கு சாட்சி' குமாரபாளையத்தில் மரக்கன்று நட்ட இளைஞர்கள்
குமரபாளையத்தில் நடிகர் விவேக் பெருமை சேர்க்க மரக்கன்றுகளை இளைஞர்கள் நட்டனர்.;
நடிகர் விவேக் மரம் வழங்குதல் (மாதிரி படம்)
குமாரபாளையத்தில் நடிகர் விவேக்குக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நடிகர் விவேக், தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்களை நட்டு பல இளைஞர் மத்தியில் மரம் நடுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். சில நாட்களுக்கு முன் அவர் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அப்போது குமாரபாளையத்தில் அவரது ரசிகர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 50 மரக்கன்றுகளும் நட்டனர்.
அதே போல நேற்றும் வாரச்சந்தை வளாகம், பெராந்தர் காடு, காவேரி நகர் ஆகிய பகுதிகளில் 50 மரக்கன்றுகள்நட்டனர்.இந்த நிகழ்ச்சியில் விவேக் ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.