வேதாரண்யத்தில் இளைஞர்கள் முயற்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

மருதூர் வடக்கு கிராமத்தில் இளைஞர்களாகவே ஒருங்கிணைத்து, புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை துவங்கியுள்ளனர்.;

Update: 2022-03-14 00:15 GMT

 மருதூர் வடக்கு கிராமத்தில் கிராம இளைஞர்கள் முயற்சியில் உருவாகியுள்ள  புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பால்வளத்தை மேம்படுத்த, மாவட்ட ஆட்சியர் கூறிய அறிவுறுத்தலின்படி, பால்உற்பத்திக்கான கட்டமைப்பு வலுப்படுத்தும் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதை தாங்கள் ஊருக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எண்ணி,  மருதூர் வடக்கு கிராமத்தில் இளைஞர்களாகவே ஒருங்கிணைத்து பால்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை துவங்கியுள்ளனர்.

இதன்மூலம்,  தமது கிராமத்தின் வருவாய் அதிகரிக்கும் என்றும்,  மகளிர் மற்றும் குடும்ப பொருளாதார நிலை உயர வாய்ப்புள்ளதாகவும் பால்வளத்துறை துணைப்பதிவாளர் இளங்கோவன் கூறினார். கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் ஊக்கமளித்த மாவட்ட ஆட்சியருக்கும் கிராம இளைஞர்கள் சார்பாக அகிலன் தமிழ்ச்செல்வன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

Similar News