வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசால் 'கம்பி' எண்ணிய இளைஞர்
சிறுமியின் புகைப்படத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் மனைவி என பதிவிட்டதால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்;
பெருந்துறை அருகே உள்ள குலத்தான் வலசையைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 26), காஞ்சிக்கோவிலில் வசிக்கும் 16 வயதுடைய தூரத்து உறவுக்கார சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்தார். ஏற்கனவே இரு முறை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றிருந்தாலும், இதை மறைத்து அந்த சிறுமியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இதைக் கவனித்த சிறுமி, அவருடன் பேசுவதை நிறுத்தினாலும், பிரகாஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனைத் தெளிவாக உணர்ந்த சிறுமியின் பெற்றோர், காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த சூழலில், பிரகாஷ் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் அந்த சிறுமியுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, "மனைவி" என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் அவரை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.