வேதாரண்யம் அருகே இயந்திரம் மூலம் நிலக்கடலை விதைப்பு பணி, அசத்திய மின் பொறியாளர்
வேதாரண்யம் அருகே மின் பொறியியல் பட்டதாரி நிலக்கடலை விதைப்புக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தி அசத்தினார்.;
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன்.அவரது அப்பா விவசாயம் செய்து வருகிறார் நிலக்கடலை நெல் உளுந்து உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.
தற்பொழுது தமிழ்ச்செல்வன் மின் பொறியாளர் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் தன் அப்பாவிற்கு உதவியாக விவசாய பணிகளை செய்து வந்தார். மின் பொறியாளர் படித்து விட்டோம் என்று நினைக்காமல் அவரே நிலக்கடலை விவசாயத்தில் இறங்கியுள்ளார்
அவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை விதை போடும் இயந்திரத்தை வெளி மாவட்டத்தில் இருந்து வாங்கி ஆட்கள் பற்றாக்குறையால் அவரே நிலக்கடலை விதைப்பு நடவு செய்து வருகிறார்
வேதாரண்யம் பகுதியில் பெண் ஆட்களால் மட்டுமே நிலக்கடலை விதைப்பு நடைபெற்று வந்த நிலையில் இவர் நிலக்கடலை விதைப்பை இயந்திரம் மூலம் செய்து அப்பகுதி விவசாயிகள் இடத்தில் புது முயற்சியாக இயந்திரத்தின் மூலம் நிலக்கடலை விதைப்பு செய்து வந்ததார்.
மற்ற விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுத்தி வருவதால் மற்ற விவசாயிகள் இவரை அணுகி அறிவியல் நுட்பமான வேலை பணிகளை தெரிந்து கொள்கின்றனர்,
நிலக்கடலை விதைப்பு பற்றி அவர் கூறுகையில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் பெண் ஆட்கள் கிடைக்காமல் இந்த வேதாரண்யம் பகுதியில் புது முயற்சியாக நிலக்கடலை விதைப்பு இயந்திரத்தில் இந்த பகுதியில் அறிமுகப்படுத்தி தன் உழைப்பின் மூலம் மற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென இலக்காக வைத்து விவசாயம் செய்து வருவதாக தெரிவித்தார்.