வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர் தாக்குதல்

வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற் கொள்ளையர்கள் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2022-01-24 03:42 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பகுதியை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர்படகில் அதே ஊரைச் சேர்ந்த நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகிய மூன்றுபேரும் இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்பொழுது இலங்கை கடற்கொள்ளையர்கள் ஒரு படகில் 3 நபர்கள் வந்து புஷ்பவனம் மீனவர்களின் படகில் ஏறி மீனவர்களை கம்பு, இரும்புகம்பி கொண்டு தாக்கியும் அவர்களை தண்ணீரில் தூக்கி விசினார். பின்பு படகில் இருந்த200 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி, வாக்கிடாக்கி செல்போன் உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.


கொள்ளையர்கள் படகில் இருந்து டீசலையும் எடுத்து சென்றனர்.இதனால் கரைக்கு வர முடியாமல் தத்தளித்த மீனவர்கள் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் 2 லிட்டர் டீசல் வாங்கி கொண்டு அவசரம் அவசரமாக ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். ஆறுகாட்டுத்துறை யிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News