போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மணல் திருடர்கள் குண்டர் சட்டததில் கைது
நாகையில் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மணல் திருடர்கள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தொடர்ந்து நள்ளிரவில் மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்களிடமிருந்து, போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதைடுத்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.
அதன்படி சென்ற மாதம் 17-ஆம் தேதி கரியாப்பட்டினம் அருகே நள்ளிரவில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மணல் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடினர்.
இந்த சம்பவத்தில் தனிப்படை போலீசார் டீன் என்பவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மணல் திருட்டை தடுக்க சென்ற காவலர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடிய வேதாரண்யம் அடுத்துள்ள கரியாப்பட்டினம் கவுண்டர்மேடுவை சேர்ந்த சக்திவேல் மற்றும் கத்திரிபுலம் கோவில்குத்தகையை சேர்ந்த கோபிநாதன் ஆகிய இருவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.