நாகை ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

நாகை ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம், நடுகடலில் இலங்கை மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.;

Update: 2021-09-02 17:52 GMT

பைல் படம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் வழக்கம் போல்  சிவக்குமார் என்பவர் படகில் சிவா/ விவேக். பெருமாள். சின்னத்தம்பி ஆகியேர் கோடியக்கரைக்கு கிழக்கே 30 நாட்டிங்கால் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை மீனவர்கள் இரண்டு படகுகளில் கத்தி கம்புகளுடன் வந்து ஆறுகாட்டுத்துறை மீனவர் படகை மடக்கினர்.

பின்னர் படகில் ஏறி வலைகள் வாக்கி டாக்கி செல்போன் மற்றும் பேட்டரி டார்ச்லைட் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அதன் மதிப்பு ரூ ஒரு லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இன்று மதியம் கரை திரும்பிய மீனவர் படகு உரிமையாளர் ஆறுகாட்டுத்துறை சிவகுமார் வேதாரண்யம் கடலோர காவல் படை அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் கடலோர குழும படையினர் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை செய்தனர்.

Tags:    

Similar News