வேதாரண்யம் கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டம்
வேதாரண்யம் கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் படகுகளை கரையில் நிறுத்தி ஆயுத பூஜை விழாவை கொண்டாடினர்.;
வேதாரண்யம் மீனவர்கள் படகுகளுக்கு பூஜை நடத்தினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை கிராமங்களான புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம்,கோடியக்கரை வானவன் மகாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மீனவர்கள் தாங்கள் கடலுக்கு மீன் பிடிக்க எடுத்து செல்லும் பைபர் படகுகளை கரையோரம் வைத்து அதனை சுத்தம் செய்து வாழைமரம், தோரணம் கட்டி படகு எஞ்ஜினுக்கு மாலை அணிவித்து படகுகளுக்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து மீனவர்கள் குடும்பத்தாருடன் படகுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.