வேதாரண்யம் அருகே குரவப்புலம் தெற்குகாட்டில் 14 நபர்களுக்கு கொரோனா
வேதாரண்யம் அருகே தெற்கு குரவப்புலம் கிராமத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குரவப்புலம் தெற்குகாடு ஊராட்சியில் ஏழு குடும்பத்தில் 14 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அவர்களை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை கடைத் தெருக்கள் வீடுகள் அடைக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இறப்பு ஏற்பட்டதால் வெளியூர்களிலிருந்து வந்தவர்களால் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவத் துறையினர் தெரிவித்தனர். அப்பகுதி முழுவதும் வெளியூரிலிருந்து வருபவர்கள் வராமலிருக்க குரவப்புலம் முக்கிய சந்திப்பில் உள்ள அனைத்து சாலைகளிலும் தகர ஷீட் மூலம் அடைக்கப்பட்டுள்ளன.
கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடு, வீடுகளுக்குச் சென்று கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் சுகாதார பணியாளர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றனர்.