வேதாரண்யம் நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கொண்டாட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது.;

Update: 2021-08-02 16:18 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது, இரண்டாவது நாளன இன்று கை கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமை வகித்தார். வேதாரண்யம் வருவாய் கோட்டாச்சியார் துரைமுருகன் கைகழுவும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

50 க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். வேதாரணியம் மேலவீதி ராஜாஜி பூங்கா நாகை சாலை தோப்புத்துறை ஆகிய இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் இதே போல் கை கழுவதலின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தடுப்பூசி போடும் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

நகராட்சியின் முன் கள பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு ஓரங்க நாடகத்தை பேருந்து நிலைய வளாகத்தில் நடித்து காண்பித்தனர்.

Tags:    

Similar News