முந்திரி விளைச்சல் வேதாரண்யம் விவசாயிகள் கவலை

வேதாரண்யத்தில் முந்திரி விளைச்சல் குறைவாக உள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2021-05-08 13:45 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளான நாகக்குடையான் தேத்தாகுடி புஷ்பவனம் நாலுவேதபதி வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பணப் பயிரான முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது

இந்த வருடம் முந்திரி சரியாக காய்க்காமல் பூச்சிகளால் தாக்கப்பட்டு முந்திரி மகசூல் குறைந்துள்ளதால் இப்பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் தற்பொழுது துளிர்விட்டு காய்க்கும் என காத்திருந்த முந்திரி விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர் விலையும் குறைவாகவே உள்ளது எனவும் விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News