கடலில் கிடந்த திரவத்தை குடித்த மீனவர் உயிரிழப்பு

Update: 2021-03-07 07:30 GMT

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த தங்கட்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் உயிரிழந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரையிலிருந்து பாம்பனைச் சேர்ந்த ஜான், தோமஸ், செல்வேந்திரன், அந்தோணி, வினோத், போஸ் ஆகிய ஆறு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.இவர்கள் சுமார் 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருக்கும்போது இன்று அதிகாலை 4 மணியளவில் கடலில் மிதந்து வந்த சுமார் 3 லிட்டர் பாட்டில் வலையில் சிக்கியது. அந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்த திரவத்தை அந்தோணி, போஸ், வினோத் ஆகிய மூன்று பேரும் குடித்ததாக கூறப்படுகிறது. இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி படகிலேயே உயிரிழந்தார்.

மீனவர் போஸ் ஆபத்தான நிலையில் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீனவர் வினோத் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News