வேதாரண்யத்தில் தையல் பயிற்சி வகுப்பை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்

வேதாரண்யத்தில் வேதா ஆயத்த ஆடை ஜவுளி பூங்கா தையல் பயிற்சி வகுப்பை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்.

Update: 2020-12-29 15:03 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் வேதா ஆயத்த ஆடை ஜவுளி பூங்கா ரூபாய் 100 கோடியில் துவங்கப்பட உள்ளது. அதற்கான தையல் பயிற்சி வகுப்பினை இன்றுதமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஒ.எஸ். மணியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த பயிற்சி முதல் கட்டமாக 105 பெண்களுக்கு வேதாரண்யம் பல்நோக்கு சேவை மைய கட்டடத்தில் நடைபெற்றது. ஜவுளி பூங்கா விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.இந்த வேத ஆயத்த ஆடை பூங்காவில் முதல் கட்டமாக 3500 பெண்களுக்கும், படிப்படியாக 21000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர், மற்றும் திருப்பூர் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News