வேளாங்கண்ணியில் கடல்சீற்றம் குடியிருப்புக்குள் கடல்நீர் உட்புகும் அபாயம்

வேளாங்கண்ணியில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் குடியிருப்பு மற்றும் கடைகளுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-25 11:51 GMT

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது

குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக சுமார் 50 அடி தூரத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் உட்புகுந்து உள்ளது

இதனால் அருகிலிருந்த கடைகள் அனைத்தும் மேடான பகுதிக்கு கொண்டு வைக்கப்பட்டுள்ளது மேலும் ஹரிமாஸ் விளக்குகள், கடலோர காவல் குழும உயர்கோபுர மேடை ஆகியவை சேதமடையும் நிலையில் உள்ளது

மேலும் ஆரிய நாட்டு தெரு மீனவர் குடியிருப்பு பகுதிகளிலும் கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது புயல் வெள்ள காலங்களில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால் எனவே தமிழக அரசு கடற்கரை ஓரங்களில் கருங்கல்லால் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என கடற்கரை வியாபாரிகள் மற்றும் மீனவ கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News