வேளாங்கண்ணியில் ஆதரவற்றோருக்கு உதவும் கரங்கள் அமைப்பு உணவு வழங்கியது

வேளாங்கண்ணியில் ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த ஆதரவற்றோருக்கு உதவும் கரங்கள் அமைப்பு உணவு வழங்கியது.;

Update: 2021-05-27 06:05 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உதவு கரங்கள் அமைப்பு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கியது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா காரணமாக தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலய பகுதிகளில் சுற்றி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்,மனநிலை பாதிக்கப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் உணவின்றி தவித்து வந்தனர்.

இவர்களுக்கு வேளாங்கண்ணியில் உள்ள உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் அதன் நிறுவனர் ஜெயராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தினந்தோறும் சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசம் அணிந்து உணவு பொட்டலங்கள் வழங்கிவருகின்றனர்.

குறிப்பாக இதுவரை ஊரடங்கு தொடங்கிய 427 வது நாளாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன இச்சேவையை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News