ஆலய வழிபாட்டிற்கு தடை: பக்தர்கள் வெளியே நின்று வழிபாடு

Update: 2021-04-26 03:43 GMT

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை, பேராலய முகப்பு தடுப்புகள் கொண்டு அடைப்பு, பக்தர்கள் ஆலயத்தின் வெளியே இருந்து வழிபாடு.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் பொது வழிபாட்டிற்கு தடை விதித்து பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது. பேராலய முகப்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டதுடன், ஆலயக் கதவுகள் மூடப்பட்டு வழக்கமான வழிபாடுகள் மற்றும் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி ஆலயத்தில் வெளியே நின்று வழிபடும் பக்தர்கள்.

அதன் காரணமாக இன்று வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் அனுமதி இல்லாமல் உள்பிரகாரத்தில் திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. அதனால் பேராலயத்தின் முன் கதவு சாத்தப்பட்டு உள்பகுதியில் மாதா சொருபம் வைக்கப்பட்டுள்ளது அங்கு வெளியில் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். இதனிடையே கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ள காரணத்தால், எப்பொழுதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

Similar News