நாகை: கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களை இ.பி.எஸ், ஓ.பி.எஸ். ஆய்வு

நாகை மாவட்டத்தில் கன மழையால் மூழ்கிய நெற்பயிர்களை எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.;

Update: 2021-11-16 14:14 GMT

நாகை மாவட்டத்தில் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை காட்டிய விவசாயிகளுக்கு  இ.பி.எஸ், ஓ.பி.எஸ். ஆறுதல் கூறினார்கள். 

நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளப் பாதிப்புகளை கடந்த 13 ஆம் தேதி ஆய்வு செய்துவிட்டு சென்றார்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் கருங்கண்ணி கிராமத்தில் மழை வெள்ளப்பாதிப்புகளை தமிழக எதிர்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர். அப்போது மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களின் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கினார்கள். ஆய்வின் போது முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜெயபால் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க கதிரவன் உள்ளிட்ட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Tags:    

Similar News