நாகையில் ரெயில் மறியல் செய்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் கைது

நாகையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-09-27 11:29 GMT
நாகையில் தண்டவாளத்தில் அமர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில் தி.மு.க, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் 3 வேளான் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக  முழக்கங்களை எழுப்பியபடி வந்தனர். எர்ணாகுளம்- காரைக்கால் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போதுமான வாகன வசதி இல்லாத காரணத்தால் திருக்கண்ணங்குடியில் இருந்து கீழ் வேளூரில் உள்ள மண்டபம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  போாலீசார்  நடந்தபடியே அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News