மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடிக்க செய்த நிபுணர்கள்

நாகப்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடி குண்டு நிபுணர்கள் வெடிக்க செய்தனர்.;

Update: 2021-05-12 01:45 GMT

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த சபரிநாதன் என்வருக்கு சொந்தமான படகில் கடந்த 8ம்தேதி சக மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றனர்.

.வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களது வலையில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று சிக்கியது ராக்கெட் லாஞ்சரை வேளாங்கண்ணி கடலோர காவல் குழும போலிசார் . கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர் .

இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றினர். பின்னர் காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமையிலான காவல்துறையினர் வேளாங்கண்ணி கடற்கரையில் ஜேசிபி எந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டு ராக்கெட் லாஞ்சரை பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்தனர். ராக்கெட் லாஞ்சர் வெடிக்கும் போது சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சத்தம் கேட்டது.

Tags:    

Similar News