அனுமதியின்றி மணல் அள்ளிய 7 பேர் கைது

Update: 2021-03-22 06:00 GMT

நாகப்பட்டினம் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கோகூர் வெட்டாறு கரைபகுதியில் மாட்டுவண்டிகளில் இரவு நேரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கீழ்வேளுர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்ற போது கோகூர் சிவன் கோவில் பின்புறம் உள்ள வெட்டாற்று பகுதியில் மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றி கொண்டிருப்பது தெரிய வந்தது.

உடனே மணல் ஏற்றி கொண்டிருந்த 7 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து மணல் அள்ள பயன்படுத்திய 7 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அனுமதியின்றி கடத்தப்பட இருந்த மணல் யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News