பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

நாடுவனப்பள்ளி கிராமத்தில், பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2021-07-26 09:45 GMT

நாடுவனப்பள்ளி கிராமத்தில் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வட்டாரம், நாடுவனப்பள்ளி கிராமத்தில், வேளாண்மைத்துறை மாநில விரிவாக்க திட்டங்களின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது.

இந்த பயிற்சியினை வேளாண்மை உதவி இயக்குநர் வானதி தொடங்கி வைத்து, பருத்தி சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விளக்கம் அளித்தார். இதில், வேளாண்மை அலுவலர் கண்ணன் பங்கேற்று விவசாயிகளுக்கு பருத்தியை தாக்கும் பூச்சிகள், ஒருங்கிணைந்த களை நிர்வாகம், தண்டு கூன் வண்டு மற்றும் காய்புழுக்கள் மற்றும் பருத்தியை தாக்கும் நோய்கள் கட்டுப்பாடு குறித்து விரிவாக விளக்கினார்.

துணை வேளாண்மை அலுவலர் ராமநாதன் கலந்து கொண்டு வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கி, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் பாரதிராஜா செய்திருந்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News