மேகலசின்னம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் மேகலசின்னம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-06-28 04:00 GMT

மேகலசின்னம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மும்பை ஏரிஸ் அக்ரோ லிமிடெட் நிறுவனம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் மேகலசின்னம்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி வழங்கும் வகையில் மும்பை  ஏரிஸ்  அக்ரோ லிமிடெட் நிறுவனம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில், அந்த நிறுவனம் சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செல்லக்குமார் முன்னிலையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் அந்த நிறுவனம் சார்பில் சானிடைசர், முக கவசம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர், கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

Tags:    

Similar News