கொரோனா பரப்புகிறதா தடுப்பூசி முகாம்? சமூக ஆர்வலர்கள் கவலை

ஊத்தங்கரை அருகே, நொச்சிப்பட்டியில் சமூக இடைவெளியின்றி நடந்த தடுப்பூசி முகாமினால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.;

Update: 2021-07-13 11:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவழும் இன்று 55 முகாம்களில் 8690 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அவ்வகையில், ஊத்தங்கரை வட்டாரத்தில் பொது சுகாதார துறையின் மூலம் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்,  380 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கொரோனா விதிமுறைகளை பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை.

அதுமட்டுமின்றி முகாமுக்கு வெளியே, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், பொதுமக்கள் கூட்டமாக கூடி நின்றனர். இதனால், நோய் தொற்றுபரவும் அபாயம் உள்ளதாக சமுக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். கொரோனா பரவலை தடுக்க வேண்டிய முகாம்களே, தொற்று பரவ வழிவகுத்துவிடுமோ என்று, அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News