மாணவர்களுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்
ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்கு மலர்தூவி உற்சாகப்படுத்தி ஆசிரியர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்கு மலர் தூவி உற்சாகப்படுத்தி ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்கள் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். மாணவர்களை ஒருங்கிணைத்து சமூக இடைவெளியுடன் அமர வைத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் எளிதில் புரியும் வகையில் கொரோனா விழிப்புணர்வு பாடல், கவிதை, கருத்துரையை மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
அப்போது தலைமை ஆசிரியர் சர்குணன் உதவி தலைமையாசிரியர்கள் வெங்கடாசலபதி, செந்தில் குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா, ஆசிரியர்கள் பூபாலன் முத்துலட்சுமி, இளவரசி, பிரபு, சிவப்பிரியா, உமா மகேஸ்வரி, சிவக்குமார், செந்தில்குமார், ஜெயச்சந்திரன், முகேஷ், ஜான்சன், அலுவலக உதவியாளர்கள் கலைச்செழியன், ஆபிரகாம், அண்ணாமலை உள்ளிட்டோர் இருந்தனர்.