பட்டா கேட்டு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

பட்டா வழங்கக்கோரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.;

Update: 2021-07-08 12:00 GMT

கண்ணன்டஅள்ளி ஆதிதிராவிட மக்கள்,  பட்டா கேட்டு, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா கண்ணன்டஅள்ளி ஆதிதிராவிட மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கண்ணன்டஅள்ளியில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த நாங்கள் 104 குடும்பத்தினர் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றோம். எங்களுக்கு சொந்தமான வீடோ, இடமோ, நிலமோ எதுவும் கிடையாது. 80 ஆண்டாக நாங்கள் வசித்து வரும் இடத்திற்கு பட்டா கிடையாது.

உயர்மின் அழுத்த கோபுரம் செல்லும் வழிகளில் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கு பட்டா இருந்தால் மட்டுமே அரசு சலுகைகளைப் பெற முடியும். எங்களின் 104 குடும்பங்களுக்கு பட்டா கேட்டு பல முறை கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பர்கூர் தாசில்தார் அலுவலகத்திலும் மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்தவித பதிலும் கொடுக்கவில்லை.

எனவே எங்களின் கோரிக்கையை ஏற்று 104 குடும்பத்தினருக்கும் உடனே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News