கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி
பாரூரில் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி சுகாதாரத்துறை தகவல்.
தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால் கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் அரசு மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று முன்தினம் பண்ணந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரொனா பரிசோதனை செய்துள்ளனர். தொற்று உறுதியானது.
இதில் அந்த மாணவன் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார். இதில் சக மாணவர்கள் 4 பேருக்கு உடல் நிலை சரியில்லாததால் இன்று காலை பரிசோதணை செய்யப்பட்டது. பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு துய்மைபடுத்தப்பட்டுள்ளாதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.