கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம்: பயிர்கள் சேதம்
கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து விவசாயப் பயிர்கள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டம் நாகமங்கலம் கிராமப்பகுதியில் சுற்றித்திரிந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
கர்நாடக மாநிலம், பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் வெளியேறி கடந்த மூன்று மாதங்களாக தமிழக எல்லைக்குள் சுற்றித்திரிந்து வருகிறது. இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை வழியாக கெலமங்கலம் அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டங்கள் தஞ்சம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் நாகமங்கலம் கிராம பகுதிக்கு வந்த யானைக் கூட்டங்கள் அருகே உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி விட்டு பின்னர் மீண்டும் ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு சென்றடைந்தது.